கால்வாயில் அடித்து செல்லப்பட்ட கார்: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

by Editor / 25-06-2025 04:33:47pm
கால்வாயில் அடித்து செல்லப்பட்ட கார்: குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்: ஹல்த்வானி நகரில் இன்று (ஜூன் 25) காலை நடந்த விபத்தில், 7 பேருடன் சென்ற கார் கால்வாயில் விழுந்து குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு பெய்து வரும் கனமழையால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததாக கூறப்படுகிறது. பலத்த நீரோட்டத்தில் கார் புரண்டு சென்று ஒரு மேம்பாலம் அருகே சிக்கியது. இதில் தண்ணீர் காரின் உள்ளே புகுந்து இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via