தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை.

by Editor / 08-08-2023 09:51:38am
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 12.8. 2023 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை

Share via

More stories