அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா - ஒ.பி.எஸ்
பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். பச்சை நிற ஆவின் பாலை மக்கள் விரும்பவில்லை என அத்துறையின் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். அவர் கூறியது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என விமர்சித்துள்ள ஒ.பி.எஸ், மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் தமிழக அரசின் இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
Tags :