சர்வதேச டீ தினம் இன்று

by Staff / 21-05-2023 04:43:24pm
சர்வதேச டீ தினம் இன்று

உலகளவில் அதிக மக்கள் குடிக்கும் பானங்கள் பட்டியல் டீ இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டீ, கிரீன் டீ, போன்ற டீ வகை உலக அளவில் அதிகம் விற்பனையாவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தினசரி நாலு கப் டீ அருந்துவது மூலம் நீரிழிவு நோய்கள், இதய நோய்கள், பக்கவாதம் வரும் வாய்ப்புகள் 17 சதவீதம் குறைகிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 300 கோடி கப் குடிக்கப்படுகிறது. அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 5 நாடுகளில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

 

Tags :

Share via