தமிழக முதலமைச்சர் விஜய் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் மதகுகளை திறந்து வைத்தார்.

by Admin / 02-09-2026 02:26:48am
தமிழக முதலமைச்சர் விஜய் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் மதகுகளை திறந்து வைத்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் மதகுகளை திறந்து வைத்தார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மேட்டூர் அணையை திறந்து வைப்பது எதுவே முதல் முறையாகும். முதலமைச்சர் முதல் கட்டமாக மூவாயிரம் கன அடி தண்ணீரை வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு மின்விசை மூலம் இயக்கி அலையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் அதன் பிறகு காவிரி நீர் மீது மலர்களை தூவி வரவேற்றார் டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்காக 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்தக் திறந்து விடும் தண்ணீரானது தஞ்சாவூர் ,திருச்சி, கரூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதியை பெரும் பொருட்டு திறந்து விடப்படுகிறது. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி அலை மதகு திறக்கப்படும்  திறக்கப்படும். ஆனால் இந்த முறை பருவமழை இல்லாததின் காரணமாக போதிய தண்ணீர் இருப்பு இல்லாததாலும் 80 நாட்கள் தாமதத்துடன் செப்டம்பர் ஒன்றாகிய இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது இருப்பின் இருப்பது 91.56 அடி என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய சங்கத்தினர் இப்பொழுது திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையான சாகுபடிக்கு பயன்படாது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் விஜய் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் மதகுகளை திறந்து வைத்தார்.
 

Tags :

Share via

More stories

Logo