நீண்ட கால முதலீடுகளில்  கவனம் செலுத்துங்கள்.

by Admin / 01-09-2026 04:10:19pm
நீண்ட கால முதலீடுகளில்  கவனம் செலுத்துங்கள்.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன் 2026) இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% வளர்ச்சியடைந்துள்ளது

. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த வளர்ச்சி பொருளாதார நிபுணர்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் 7% மதிப்பீட்டை விட அதிகமாகும்.

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம்  வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இந்த காலாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி ₹81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த நிதியாண்டின் (2025-26) இதே காலாண்டில் இது ₹75.46 லட்சம் கோடியாக இருந்தது. தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையிலான ஜிடிபி 10.3% வளர்ச்சியைப் பதிவு செய்து, ₹88.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு வளர்ச்சி: 2025-26 நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.90% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொழில்துறை விரிவாக்கத்தின் பலனாக உற்பத்தித் துறை மதிப்புக்கூட்டுதல் 9.2% வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. உள்கட்டமைப்புப் பணிகள் வேகமெடுத்ததால் இத்துறை 7.7% வளர்ச்சி கண்டுள்ளது. 

சிமெண்ட் உற்பத்தி மற்றும் எஃகு நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது.மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் விநியோகத் துறை 8.9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.வேளாண்மைத் துறை: விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் 3.6% வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

 உணவு தானிய உற்பத்தி 4.8% உயர்ந்தது.சுரங்கத் துறை இக்காலாண்டில் 2.4% சரிவைச் சந்தித்துள்ளது.பொருளாதாரம் வலுவாக வளர்ந்துபோர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த துறைகள் நல்ல வளர்ச்சியைத் தருவதால், உங்கள் முதலீடுகளை ஒரே துறையில் குவிக்காமல் பரவலாக்குங்கள் .

 உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், குறைந்தது 6 மாத செலவிற்கான அவசரகால நிதியைத் தயாராக வைத்திருங்கள்

.கடன் மேலாண்மை அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் அடைத்துவிட்டு, நீண்ட கால முதலீடுகளில்  கவனம் செலுத்துங்கள்.

 

Tags :

Share via
Logo