சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவர் கைது.

by Staff / 16-03-2023 02:03:30pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை டிரைவர் கைது.

தண்டராம்பட்டை அடுத்த டி. வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 46). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு முட்டை வாங்க வந்தாள். அந்த சிறுமிக்கு குமார் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள கொட்டகை பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து வந்து தாயிடம் கூறினாள். அதிர்ச்சி அடைந்த தாய், மகளை அழைத்துக் கொண்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தார். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து. தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் குமாரை நேற்று மாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo