இந்த காளானுக்கு இவ்வளவு கிராக்கியா

சீன ராணுவம் தொடர்ந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து வருகிறது. இந்திய ராணுவமும் தொடர்ந்து அவர்களுக்கு பதிலடி கொடுத்து விரட்டி வருகிறது. இதற்கு காரணம், இந்தியாவில் இருக்கும் ஒரு பூஞ்சை தங்கத்தை விட அதிக விலைக்கு செல்லக்கூடியது என சீனாவுக்கு தெரிந்திருப்பதாக கூறப்படுகிறது. Cordyceps எனப்படும் ஒரு வகை காளானில் ஆச்சர்யமூட்டும் மருத்துவ பயன்கள் இருக்கின்றன. இவற்றை இமாலய தங்கம் என அழைக்கின்றனர். இந்த காளானுக்குதான் தங்கத்தை விட மதிப்பு அதிகமாம். ஒரு கிலோ காளானே பல லட்சத்திற்கு செல்லுமாம். இந்த காளான் இந்தியா - திபெத்திய எல்லையில் நிறைய கிடைக்கிறது. சீனாவில் இதன் வளர்ச்சி குறைந்ததையடுத்து இந்தியாவில் வளரும் இந்த காளானை இந்தியா கைப்பற்ற நினைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tags :