18 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

by Admin / 03-08-2021 12:10:33pm
18 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை


சென்னையில் 7 ஆண்டுகளுக்கு முன் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பலாத்காரம் செய்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி-யின் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 2 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை கடத்தி, அடைத்து வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடத் தூண்டியதோடு அதற்கு உதவியாகவும் இருந்துள்ளனர். மேலும் கிருஷ்ணவேணி, மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் இணைந்து புளியந்தோப்பைச் சேர்ந்த நவாஸ் மற்றும் மின்ட் ஸ்டாலின் ஆகிய இரு நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு 18 வயதுக்கு உட்பட்ட அச்சிறுமியை அவர்கள் மூலம் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தி பலமுறை பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி-யின் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய கிருஷ்ணவேணி, இளங்கோவன் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நவாஸ், மிண்ட் ஸ்டாலின் ஆகிய 4 நபர்களை கைது செய்து அவர்கள் மீது சிறுமியை கடத்துதல், அடைத்து வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி-யின் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து வந்தது. பின்பு வழக்கு விசாரணை சென்னை போக்ஸோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையானது முடிவுற்று கடந்த 26 ஆம் தேதி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கிருஷ்ணவேணி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

18 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
 

Tags :

Share via

More stories