காந்தியடிகளின் 76வது நினைவு நாள்குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை.
காந்தியடிகளின் 76வது நினைவு நாள் இன்று (ஜன.30) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள X பதிவில், மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
Tags : குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை