இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சைஅளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அவர் உடல் நலம் சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி