சேலத்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது

by Staff / 14-03-2024 02:07:52pm
சேலத்தில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கந்தம்பிச்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 58). இவர், 7-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூறினார். உடனே சக மாணவிகளின் பெற்றோர்களும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அப்படி இருந்தும் சமாதானம் அடையாத பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். மாணவியின் தாய் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

 

Tags :

Share via

More stories

Logo