சோனியா- பிரியங்கா சந்திப்பு

by Editor / 06-07-2021 07:37:18pm
சோனியா- பிரியங்கா சந்திப்பு



காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார்.
பஞ்சாப் முதல்வர் சந்திப்பை முன்னிட்டு சோனியா காந்தியை பிரியங்கா காந்தி சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட பணிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.
பஞ்சாப் முதல்வர் மீது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து தில்லி சென்று பிரியங்கா காந்தியை சந்தித்தார்.

 

Tags :

Share via