வெற்றிகளை நோக்கி நகரும் ஆதித்யா எல்1 விண்கலம்.

by Editor / 10-09-2023 08:20:04am
வெற்றிகளை நோக்கி நகரும் ஆதித்யா எல்1 விண்கலம்.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ செப்டம்பர் 2ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மூன்றாவது புவி சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற்கொண்டது. ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது 296 x 71,767 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 40.225 கி.மீ இருந்து 71.767கி.மீ உயர்த்தபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.மொத்தம் 5 சுற்றுப்பாதை விரிவாக்க செயல்திட்டத்திற்கு பிறகு ஆதித்யா எல்1 சூரியனின் லாக்ரேஞ்ச் புள்ளியை நோக்கி பயணிக்கும். 

 

Tags : வெற்றிகளை நோக்கி நகரும் ஆதித்யா எல்1 விண்கலம்.

Share via