அண்ணாமலையார் கோவிலுக்கு வருவதாக ஜெயம் ரவி தகவல்..

by Editor / 17-01-2025 10:15:27am
அண்ணாமலையார் கோவிலுக்கு வருவதாக ஜெயம் ரவி தகவல்..

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அண்ணாமலையாருக்கு உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர் ஜெயம் ரவி  சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் ஜெயம் ரவிக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியை பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க ரசிகர்கள்,பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டனர். 

செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் ஜெயம் ரவி படம் ரிலீசிக்கும் கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மனம் நிம்மதிக்காக தான் கோவிலுக்கு வருவதாகவும், அப்பா அம்மா செய்த புண்ணியத்தாலும்  மனசுக்கு தோணும்போதெல்லாம் கோயிலுக்கு வருவேன் என தெரிவித்தார்.

 

Tags : அண்ணாமலையார் கோவிலுக்கு வருவதாக ஜெயம் ரவி தகவல்..

Share via