தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

by Admin / 03-08-2021 12:20:17pm
தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை



சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினத்தையொட்டி, சென்னை
கிண்டியிலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தவர் தீரன் சின்னமலை.

 
கிக்கிந்தியகம்பெனியினரின் சூழ்ச்சியால்கைது செய்யப்பட்டு, சங்ககிரி
கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார்.  அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று தீரன் சின்னமலையின் 216வது நினைவுதினத்தையொட்டி, சென்னைகிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்குகீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டையில், தீரன் சின்னமலை தூக் கிலிடப்பட்ட இடத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via