ஈஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Staff / 21-03-2023 03:00:35pm
ஈஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈஷா நிறுவனர் வாசுதேவை விசாரிக்க வேண்டும், ஈஷாவை மின் மயானப் பொறுப்புகளில் இருந்து விலக்க வேண்டும், அங்கு தொடரும் பல்வேறு மர்ம மரணங்கள் குறித்து விசாரித்து வரும் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும், ஈஷாவிடம் வழங்கப்பட்டுள்ள மின் மயான பராமரிப்பு ஒப்பந்தங்களை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈஷாவிற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு உட்பட பெரியாரிய மார்க்சிய அம்பேத்கரிய இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo