ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை- இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

by Editor / 18-09-2022 11:15:28am
ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை- இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் நேற்று நள்ளிரவில் போஸ்டர் ஒட்டினர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் அவரது ஓட்டுநர் பாண்டி ஆகியோர் அங்கு வந்தனர் .அப்போது, அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதை தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கி சென்றதாக தெரிகிறது.இந்நிலையில், போஸ்டரை பிடுங்கியதை கண்டித்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆய்வாளர் சென்ற வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்தை, சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பாஜக நகரத்தலைவர் சீனிவாசன் மற்றும் ரகு பாபு ஆகியோரை போலீசார் கைதுசெய்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் பரமசிவம், சீனிவாசன் ஆகியோரை தற்போது போலீசார்  கைது செய்துள்ளனர்.

ஆய்வாளர் மற்றும் காவலருக்கு அடி உதை- இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
 

Tags :

Share via

More stories

Logo