திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சீமான் தலைமையில்....

by Admin / 27-12-2025 05:39:22pm
 திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சீமான் தலைமையில்....

இன்று சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்  கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்பதை வலியுறுத்திய சீமான் 134 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனைகளையும் மேற்கொண்டார். திராவிடர்கள் என்று சொல்பவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் . தமிழர்கள் ஓட்டு போட்டால் போதும் என்று அவர் ஆவேசமாக பேசியதோடு இலவச திட்டங்களை விட நிரந்தர வேலை வேலை வாய்ப்பை முக்கியம் என்றும் ஊழலுக்கு எதிராகவும் தனது கருத்துக்களை வலுப்படுத்தி பேசினார். 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுக்குழு மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via