ஆம்பூர் அருகே டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது.

by Editor / 03-06-2025 11:38:37pm
ஆம்பூர் அருகே டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்காபுரம் பகுதியில் மெடிக்கல் கடையில் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருவதாக தொடர்ந்து அரசு மருத்துவ அலுவலருக்கு புகார்கள் வந்த நிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் லோகேஷ் அளித்த புகாரின் பேரில் உமராபாத் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மெடிக்கல் கடையில் அதே பகுதியை சேர்ந்த போலி மருத்துவர் அஜீத்குமார் என்பவர் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு பொதுமக்களுக்கு  ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அங்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags : ஆம்பூர் அருகே டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது.

Share via

More stories

Logo