சாலையில் சைக்கிளிங் செய்த முதல்வர்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது அவரது பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்குத் தெரிந்தது. அவர் அவ்வப்போது தன் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் சைக்கிளிங் செல்வதும் வழக்கம்.
அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அவர், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்று உள்ளார். அப்போது வழியில் அவருடன் பல பொது மக்கள் உரையாடி உள்ளனர்.
Tags :