நகை மாயமானதாக புகார் அளித்த நிகிதா மீது  மோசடிவழக்கு..? 

by Staff / 02-07-2025 11:32:33pm
 நகை மாயமானதாக புகார் அளித்த நிகிதா மீது  மோசடிவழக்கு..? 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காரிலிருந்து நகை மாயமானதாக அஜித்குமார் வழக்கில்   புகார் அளித்த நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 திருமங்கலம் தாலுகாவை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் அவரது உறவினர்களுக்கு அரசு பணியில் ஆசிரியர் வேலை மற்றும் விஏஓ வேலை வாங்கி தருவதாகவும் தனக்கு அப்போது துணை முதல்வர் உடைய பிஏ நன்கு பழக்கம் எனவும் அவர் மூலமாக வேலை வாங்கி தருவதாக உத்தரவாதம் அளித்து 16 லட்சம் ரூபாய் பெற்றதாக புகார் அளித்துள்ளார்.

 இறுதியில் வேலை வாங்கித் தராமல் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னையும் தனது உறவினரையும் ஏமாற்றி விட்டதோடு பணத்தை திருப்பி தராமல் தலைமுறைவாகிவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

 

Tags : A fraud case against Nikita, who reported missing jewelry..?

Share via