வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசை கண்டித்த துரைமுருகன்

by Editor / 05-08-2024 02:40:23pm
வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசை கண்டித்த துரைமுருகன்

வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? கல்லா?. நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வயநாடு கண்ணீர் கடலில் மிதக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via