கனமழையால் தோப்பூர் திறந்தவெளி அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேதம்

மதுரை மாவட்டம் தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் சேதமடைந்து மீண்டும் பயிரிட்டு முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :