போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஒருவருக்கு துப்பாக்கி சூடு.

by Editor / 12-10-2023 09:24:16am
 போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஒருவருக்கு துப்பாக்கி சூடு.

சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இந்த என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.இவர்கள் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். மேலும், சென்னை அழைத்து வந்த நிலையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்சி செய்தபோது 2 ரவுடிகளையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.ரவுடிகளின் தாக்குதலில் சில போலீசார் காயமடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம்பகுதி  ரவுடியான தணிகா என்ற தணிகாசலம் மீது செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக செங்கல்பட்டிற்க்கு அழைத்து வந்தனர்.அப்போது மாமண்டூர் அருகே போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது ரவுடி தணிகாவை போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் கை மற்றும் கால் ஆகிய பகுதியில் சுட்டு பிடித்தனர்.

 

Tags : போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

Share via

More stories

Logo