இன்ஸ்டாகிராம் நண்பரோடு மலைப்பகுதியில் பைக்கில் சுற்றி பார்க்க சென்ற 15 வயது இளம் பெண் பலி. 

by Editor / 08-11-2024 10:22:51am
இன்ஸ்டாகிராம் நண்பரோடு மலைப்பகுதியில் பைக்கில் சுற்றி பார்க்க சென்ற 15 வயது இளம் பெண் பலி. 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ்- கண்மணி தம்பதியினரின் மகள் மோனிகா(15) சித்தோடு டெக்ஸ்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்ட சுனில் என்பவருடன் மோட்டார் பைக்கில் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலையை நேற்று சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். ஊசிமலை பர்கூர் மாட்டு இன ஆராய்ச்சி மையம் அருகில் உள்ள வளைவில் திரும்பும்போது தானாக பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இதில் பைக்கின் பின்னால் உட்கார்ந்து இருந்த மோனிகாவிற்கு கழுத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.பின்பு அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிசைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags : இன்ஸ்டாகிராம் நண்பரோடு மலைப்பகுதியில் பைக்கில் சுற்றி பார்க்க சென்ற 15 வயது இளம் பெண் பலி. 

Share via

More stories

Logo