மீன் அரவை தொழிற்சாலை அலுவலகத்தில் 3 தினங்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களாத் தெருவை சேர்ந்த அந்தோணி அரசாங்க மணி என்பவர் அந்தோணி டிரேடர்ஸ் என்ற பெயரில் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மீன் அரவை தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சார் உணவு பொருட்களை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரது நிறுவன அலுவலகம் கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ளது.இந்நிலையில் புதன்கிழமை திடீரென 4 வாகனங்களில் வந்த வருமானவரித்துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள்அந்தோணி அரசாங்க மணி வீடு, சிவந்திபட்டியில் உள்ள கம்பெனி, கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவில் அலுவலகம் என ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். புதன்கிழமை தொடங்கிய சோதனை 2வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. இன்று அதிகாலை வரை நடைபெற்ற வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
Tags : 3 தினங்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு