லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து

by Staff / 21-03-2023 02:48:29pm
லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் கூட்டுச்சாலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரி மற்றும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற பார்ச்சூனர் கார் நேருக்கு நேர் மோதியது. இதில், லாரியின் டீசல் டேங்க் அருகே மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வாகனத்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு சென்று மூன்று தீயணைப்பு வாகனம் மூலமாக தீயை அணைத்தனர். இரண்டு வாகனங்களும் தீக்கரையானது. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo