இன்று திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரை- முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

by Admin / 27-12-2025 03:05:37pm
 இன்று திருவண்ணாமலையில்  வேளாண்  கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரை- முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

 இன்று திருவண்ணாமலையில் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற வேளாண்  கண்காட்சியைதமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். திராவிட மாடல் ஆட்சியில் இது மூன்றாவது வேளாண் சிறப்பு நிகழ்வு என்பதை குறிப்பிட்டதோடு உண்மையில் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கிற ஆட்சியாக உள்ளதாகவும் சிலர் விவசாயி பிரச்சனைகளை தீர்க்காமல் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் என்றும் இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டு விவசாயிக்கு எதிராக செயல்படுபவர் என்றும் கூறினாா். இந்த ஆட்சியில் தான் மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் திருவண்ணாமலையில் ஐந்து கோடியில் சிறப்பு சேமிப்பு கடமையை அமைப்பது  பெரண மல்லூர்பகுதியில் 500 மெட்ரிக் கொள்ளளவு கொண்ட சேமித்துக்கிடங்கு அமைக்கப்படும்  வேளாண் விளைபொருளை உலர் படுத்தி விற்பனை செய்ய இயல்பாக ஒரு கோடி மதிப்பில் புதிய உலர் கூடம் அமைக்கப்படும்.  கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய வேளாண் கருவிகளின் அவசியத்தை வலியுறுத்தியதோடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு மானியங்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை அவர் வழங்கினார்

இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் ரகங்கள் ,நவீன நீர் பாசன முறைகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மல பாம்பாடி கலைஞர் இடையில் நடைபெற்ற அரசு விழாவில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் 30 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியேசித்து தொடங்கி வைத்தார்.

 

 

 

 இன்று திருவண்ணாமலையில்  வேளாண்  கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரை- முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via

More stories