​​​​​​​தமிழகத்தில் 36 மணி நேரத்தில்  2,512 ரௌடிகள் கைது 733 பேர் சிறையில் அடைப்பு 

by Editor / 25-09-2021 03:47:38pm
​​​​​​​தமிழகத்தில் 36 மணி நேரத்தில்  2,512 ரௌடிகள் கைது 733 பேர் சிறையில் அடைப்பு 



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.. குறிப்பாக தென் மாவட்டங்களில் முன் பகை மற்றும் ஜாதி ரீதியான பிரச்சனைகள் காரணமாக கொலைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.. இதே போல் சென்னையிலும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன..
இதே போல் மாநிலம் முழுவது ரௌடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.. இதனையடுத்து கொலை சம்பவங்களை தடுக்க, ரௌடிகளின் கொட்டத்தை ஒடுக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவு செய்தனர்..
அதன்படி தலைமறைவாக உள்ள ரௌடிகள், பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜாராகமல் உள்ள ரௌடிகள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.. மேலும் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு ரௌடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டார்.. அதன்படி வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு முழுவதும், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. நேற்றும் இந்த சோதனை தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த 36 மணி நேரத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2512 பேர் கைது செய்யப்பட்டனர்.. அவர்களின் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. கைது செய்யப்பட்டவர்களில் 733 ரௌடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடர்வதால், பலர் ஆந்திராவுக்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது..

 

Tags :

Share via