பெங்களூர் – பஞ்சாப், ஐதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

by Editor / 03-10-2021 05:07:23pm
பெங்களூர் – பஞ்சாப், ஐதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் டி20 போட்டியில் இன்று பெங்களூர் பஞ்சாப் அணியும், ஐதராபாத் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

14வது ஐபிஎல் டி20 போட்டியின் 48வது லீக் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜார்ஜாவில் நடைபெறுகிறது. இதில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

அதே நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை கடைசி ஓவரில் தோற்கடித்ததால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இருப்பினும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 7 தோல்வி) உள்ள பஞ்சாப் அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ரன்ரேட்டிலும் ஆரோக்கியமான நிலையை எட்ட வேண்டியது முக்கியம். ஒன்றில் தோற்றாலும் வெளியேற்றம் தான். ஏற்கனவே பெங்களூருவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கும் பஞ்சாப் அணி மீண்டும் வெற்றி பெற வேண்டும்.

ஐதராபாத் கொல்கத்தா

இதே போல் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி கண்டு ரன்ரேட்டிலும் வலுவாக இருந்தால் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.9 தோல்விகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ஐதராபாத் அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும். எதிரணியின் அடுத்த சுற்று கனவை சீர்குலைக்கும் வாய்ப்பை பெற்றுள்ள ஐதராபாத் அணி, அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுமா? அல்லது விட்டுக் கொடுக்காமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐபிஎல் 2021 டி20 தொடரில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் கடந்து வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் அளித்தனர். 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டு பிளஸ்சிஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரெய்னா 3 ரன்களிலும், மொயீன் அலி 21 ரன்னிலும், ராயிடு 2 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதும் மறுமுனையில் தொடக்க வீரர் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 101 ரன்களுடனும், 15 பந்துகளில் 32 ரன்களுடன் ஜடேஜாவும் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இயன் லிவிஸ் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.

இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இயன் லிவிஸ் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால், மறுமுனையில் ஜெய்ஷ்வால் அரைசதம் விளாசினார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து கேஎம் ஆசிப் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சஞ்சு சாம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் விளாசினார். இறுதியில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த சென்னையின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

 

Tags :

Share via