கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

by Admin / 09-08-2021 03:25:22pm
கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

தேவை

கோழி – 1/2 கிலோ

இஞ்சி, பூண்டு, உப்பு – சிறிதளவு

தேங்காய் எண்ணெய் – 50 கிராம்

எலுமிச்சம் பழம் – 1

மிளகாய்தூள் – 1 கரண்டி

சிவப்பு கலர், பவுடர் – சிறிதளவு

தயிர் – 2 டீஸ்பூன்

நெய் – 50 கிராம்

செய்முறை

தோல் நீக்கிய கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். தயிரில் கோழித்துண்டு, தட்டிய பூண்டு இஞ்சி, கலர் பவுடர், எலுமிச்சம்பழ சாறு சேர்த்து 1மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் போட்டு எண்ணெய் மிளகாய்த்தூள் சேர்த்து 10 நிமிடம் குக்கரில் லேசாக வேக வைக்கவும். கோழித்துண்டுகளை தனியே எடுத்து சாறை வற்ற வைக்கவும். வெந்த கோழித் துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான கோழி ரோஸ்ட் ரெடி.

 

Tags :

Share via