திமுக அரசில் ரத்து செய்யப்பட்ட அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் .

by Admin / 09-04-2026 06:21:01am
 திமுக அரசில் ரத்து செய்யப்பட்ட அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் .

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில்  சென்னை அண்ணாநகர் ,தி .நகர், பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் ..அப்பொழுது அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட பல முதலீட்டு திட்டங்களையும் மக்கள் நலத் திட்டங்களையும் தற்போது திமுக அரசு தனது சொந்த திட்டங்கள் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தின் தற்போதைய இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி என்பது முந்தைய அதிமுக ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் மற்றும் புரிந்து உணர்வு ஒப்பந்தங்களின் தலைமை தவிர தற்போதைய ஸ்டாலின் அரசின் சாதனை அல்ல என்றும் அவர் தெரிவித்தார் .சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் ஏற்பட்டுள்ள சுணக்கம் விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார் .2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தால் திமுக அரசில் ரத்து செய்யப்பட்ட அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

 திமுக அரசில் ரத்து செய்யப்பட்ட அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் .
 

Tags :

Share via

More stories

Logo