பங்களாதேஷில் டெங்கு உயிரிழப்பு 778 ஆக உயர்வு
பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 778 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலால் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு பாதிப்பு குறித்து முழுமையாக பதிவு செய்யப்படாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என ஐ.நா சிறுவர் நல அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் இருவர் டெங்கு காய்ச்சலில் நேற்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :