கூகுளுக்கு அதிர்ச்சி.. ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பயனர்களின் வரைபடங்கள் மற்றும் இருப்பிடங்களை அவர்களின் அனுமதியின்றி கண்காணிப்பதற்காக 93 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்கப்படும் என பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போண்டா, கூகுள் பயனர்களின் தரவுகளைப் பணமாக்குவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :