தென்காசி சட்டமன்ற தொகுதி தபால்  வாக்குகள் மீண்டும் எண்ணி அறிவிக்கஆயத்தப் பணிகள் தீவிரம்

by Editor / 12-07-2023 12:14:22am
தென்காசி சட்டமன்ற தொகுதி தபால்  வாக்குகள் மீண்டும் எண்ணி அறிவிக்கஆயத்தப் பணிகள் தீவிரம் தென்காசி சட்டமன்ற தொகுதி தபால்  வாக்குகள் மீண்டும் எண்ணி அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயத்தப் பணிகள் தீவிரம் 2021 தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி குறித்து நேரில்  ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 13 ஆம் தேதி காலை 10 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும் எனவும், வேட்பாளர்கள் 18 நபர்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர்கள் என 18 முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பங்கேற்கலாம்.பங்கேற்க விரும்பும் முகவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் ஒரு மேஜை கணக்கில் ஏழு பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ளது. மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via

More stories