தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது-பட்ஜெட் செய்தி துளிகள்.

by Editor / 14-03-2025 10:58:01am
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது-பட்ஜெட் செய்தி துளிகள்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது - பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

பட்ஜெட் செய்தி துளிகள்.

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.
எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு.

இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது.
இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்.

நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும்

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது
.
ஐக்கிய நாடு சபைகளில் அங்கீகரிக்கப்பட்ட 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயற்க்கப்படும்.
.
கலைஞர் கணவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தர ரூ.3500 கோடி ஒதுக்கீடு
3,500 கோடியில் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்

கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு

100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்.

ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்..

அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்

ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்,மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும்.

மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு

பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும்

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்.

கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு.

வேளச்சேரி பிரதான சாலை முதல் குரு நானக் கல்லூரி வரை 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

3796 கோடியை ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.

அனைத்து நகர்புறங்களிலும் சாலையை மேம்படுத்த 3 ஆயிரத்து 700 கோடி ஒதுக்கீடு.

தாம்பரத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.

கிராம சாலை மேம்பாட்டுக்காக 2200 கோடி ஒதுக்கீடு.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 1700 கோடி ஒதுக்கீடு.

பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை கடலில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

மதுரை திருச்சி ஈரோடு கோவையில் கழிவுநீர் ஆற்றில் கலப்பை தடுக்க 400 கோடியில் திட்டம்

675 கோடி மதிப்பில் 102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.

சென்னையில் ஏழு இடங்களில் மழை நீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்க 88 கோடி ஒதுக்கீடு.

கிராம சாலை மேம்பாட்டுக்கு 2200 கோடி ஒதுக்கீடு.

சென்னையில் சீராக குடிநீர் இணைவை புதுப்பித்திட சுற்றுக் குழாய் திட்டத்திற்கு 2400 கோடி ஒதுக்கீடு 10 ஆண்டுகள் பழமையான 102 கூட்டு குடிநீர் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்ய 675 கோடி ஒதுக்கீடு.

டெல்லி மும்பை கொல்கத்தா சிங்கப்பூர் துபாயில் புத்தக கண்காட்சி நடத்த ரெண்டு கோடி ஒதுக்கீடு

சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும்.புதிதாக அமையும் நகரத்தில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கலைஞர் உரிமைத்தொகை புதிதாக விண்ணப்பிக்கலாம்

பட்ஜெட் துறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.இதுவரை உரிமை தொகை வராதவர்கள் விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி ஒதுக்கீடு.
திருவிழா காலங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்த மூன்றாம் பாலினத்தவருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

275 கோடியில் சென்னை கோவை மதுரையில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.

ஏழு மாவட்டங்களில் 6668 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அமைக்கப்படும்.
புதுமைப்பெண் திட்டத்திற்கு 420 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு முழுவதும் பத்து இடங்களில் 77 கோடியில் தோழி விடுதிகள்.
வேர் கல்வி சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 19 சதவீதம் உயர்வு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி வங்கி கடன் வழங்க நடவடிக்கை.
10 கோடியில் மூத்த குடிமக்களுக்கு அன்பு சோலை திட்டம்.
விடியல் பயணம் மூலம் பெண்கள் சராசரியாக மாதம் 888 ரூபாய் சேமிக்கின்றனர் பேருந்தில் பயணம் செய்பவரின் சதவீதம் 40 முதல் 60 சதவீதமாக அதிகரிப்பு.

மூன்றாம் பாலினத்தவர் உயர் கல்விப் பயில தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்

பள்ளிகளில் புதிய வகுப்பறை அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க ஆயிரம் கோடி ஒதுக்கீடு

நகர்புற பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த 600 கோடி ஒதுக்கீடு

மும்மொழி கொள்கையை ஏற்காததால் 2152 கோடி நிதி நிறுத்தப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தர்மபுரி மாவட்டம் ஈரோடு சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்

160 கோடியில் 2000 பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும்


 

 

Tags : பட்ஜெட் செய்தி துளிகள்.

Share via