சீன முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்

by Staff / 27-10-2023 03:46:27pm
சீன முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்

சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங் (வயது 68) மாரடைப்பால் காலமானார். ஷாங்காயில் தங்கியிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் அக்டோபர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2013 முதல் மார்ச் 2023 வரை சீனாவின் பிரதமராக இருந்தவர் லீ கெகியாங். பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் கொள்கைகளை இவர் வகுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via