இந்தியா சரித்திர வெற்றி..!

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 251 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சரித்திர வெற்றிபெற்றது. தோனிக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. 49வது ஓவரிலேயே இந்திய அணி மொத்தம் 254 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. கேஎல் ராகுல் 34 ரன்களும், ஜடேஜா 9 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Tags : இந்தியா சரித்திர வெற்றி..!