ஏக் பாரத ஸ்ரேஷ்டபாரத் திட்டத்தில் குற்றாலம் உள்பட தமிழகத்தில் 6 சுற்றுலா தலங்கள் தேர்வு

குற்றாலம் அருவி, காஞ்சி, கன்னியாகுமரி, தஞ்சை, ஏற்காடு மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்கள் மத்திய சுற்றுலாத்துறை தேர்வு செய்த 100 சுற்றுலா தலங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த சுற்றுலாத்தலங்கள் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அமைச்சகம் சமர்பித்தது.
அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அளிக்கப்பட்ட சுற்றறிக்கையில், மாணவர்களிடையே ஏக் பாரத ஸ்ரேஷ்டபாரத் திட்டத்தின் உணர்வை வலுப்படுத்த மற்றும் ஊக்குவிக்க இந்த பட்டியலை மானியக்குழு முன்மொழிகிறது என்று தேசிய கல்விக் கொள்கை அறிவித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை NEP 2020-ஐ செயல்படுத்துவதற்கானஏக் பாரத ஸ்ரேஷ்டபாரத் திட்டம்தொடர்பான ஒரு செயல்பாடு நாட்டில் அடையாளம் காணப்பட்ட 100 சுற்றுலாத் தலங்களுக்கு மாணவர்களின் வருகை புரிவது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் மாறுபட்ட மற்றும் வளமான கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய புரிதலை அதிகரிக்கும் ஒரு பகுதியாக இந்த தலங்களின் வரலாறு, பாரம்பரியம், இலக்கியம் மற்றும் அறிவியல்சார் பங்களிப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள மாணவர்களை இந்த தலங்களுக்கு இ.பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.
மாணவர்கள் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான ஆய்வுகளையும் மேற்கொள்வார்கள் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும்போது மட்டுமே வருகைகள் ஏற்பாடு செய்யப்படலாம் என்று வலியுறுத்தி, இந்த இடங்களைப் பற்றி டிஜிட்டல் முறையில் அறிய மாணவர்களை ஊக்குவிக்க முடியும் என்றும் ஆணையம் கூறியது. ஆந்திராவில் நான்கு இடங்கள், கர்நாடகாவில் ஏழு இடங்கள், கேரளாவில் மூன்று பகுதிகள் மற்றும் தெலுங்கானாவில் இரண்டு இடங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Tags :