பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல்

by Staff / 18-01-2023 04:21:00pm
 பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகி இருந்த நிலையில், வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.

 

Tags :

Share via

More stories

Logo