‘பயங்கரவாதிகளை தியாகிகளாகப் புகழ்வதா?’  ஐ.நா. சபையில் பாக்  மீது இந்தியா குற்றச்சாட்டு

by Editor / 05-10-2021 04:51:11pm
‘பயங்கரவாதிகளை தியாகிகளாகப் புகழ்வதா?’  ஐ.நா. சபையில் பாக்  மீது இந்தியா குற்றச்சாட்டு

 

‘பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது பாகிஸ்தான்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத், 'பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி இங்கு அமைதி, பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான் கான், 'ஒசாமா பின்லேடன்' போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாகப் போற்றுகிறார் என்று சாடினார்.


ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தியாவுக்குள் நடக்கும் இவ்விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்க இவை தகுதியற்றவவை. சட்ட விரோத ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றார் அவர்.ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் சம்பந்தமாக இந்தியாவுக்கு எதிராக வீணான தவறான பல குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது பாகிஸ்தான் என்று கூறிய அமர்நாத், ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசப் பகுதிகள். முழுவதுமே இந்தியாவோடு இணைந்த பகுதி. எக்காலத்திலும் பிரிக்க முடியாத பகுதி என்றார்.


பாகிஸ்தான் சட்டத்துக்குப் புறம்பாக ஜம்மு -காஷ்மீரின் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது. இதை அனுமதிக்க மாட்டோம். அப்படி ஆக்கிரமித்திருக்கும் பகுதிகளை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று கண்டிப்போடு கூறினார்.


பயங்கரவாதிகளை ஊக்குவித்தல், உதவி அளித்தல், அவர்களின் நடவடிக்கைகளுக்கு துணை போகிற பட்சத்தில் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எடுக்கும் நடவ டிக்கைகளுக்கு பாகிஸ்தான் எப்படி துணை நிற்கும் என்று எதிர்பார்க்க முடியும் என்று அவர் ஆவேசமாகக் கேள்வியும் எழுப்பினார்.பிராந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் அமைதி, பாதுகாப்பை விரும்புகிறது இந்தியா என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.ஆயுதக் கலைப்பை இந்தியா ஆதரித்தால், ஆயுதத்தை கையில் எடுப்பதை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்றும் தாக்கினார்.

 

Tags :

Share via