மியான்மரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

மியான்மர் எல்லையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.19 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றைய தினம் சீனா, பப்புவா நியூ கினியா, ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதே போல் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜப்பானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Tags :