7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம்  கட்டணம் வசூலிக்கக் கூடாது:  தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்

by Editor / 04-10-2021 06:33:19pm
7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம்  கட்டணம் வசூலிக்கக் கூடாது:  தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்

 தமிழகத்தில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.


அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு 6,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 4,920 மாணவர்கள் தனியார் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளனர்.


நடப்பு ஆண்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதுகுறித்த அரசாணை வெளியிடப்படாததால், தனியார் கல்லூரிகள், மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வலியுறுத்தின.


இந்நிலையில், இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via