பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

by Staff / 04-05-2023 11:17:21am
 பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

சேலம் மாவட்டம்  காடையாம்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (40). இவர் அப்பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவியை பள்ளிக்கு செல்லும் போது கேலி செய்து வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியிடம் ரவிக்குமார் ஆசை வார்த்தை கூறி, பின்னர் பப்ஸ் வாங்கி கொடுத்து அங்குள்ள வீட்டுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த சம்பவங்களை அவரது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். மாணவியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories