கடலோர காவல்படையின் புதிய தலைமை இயக்குநர் பொறுப்பேற்றார்

by Staff / 15-10-2024 11:42:03am
கடலோர காவல்படையின் புதிய தலைமை இயக்குநர் பொறுப்பேற்றார்

கடலோர காவல்படையின் புதிய தலைமை இயக்குநராக எஸ்.பரமேஷ் இன்று டெல்லியில் பொறுப்பேற்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் சேவை செய்துள்ள எஸ்.பரமேஷ், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். 2012 இல் தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.

 

Tags :

Share via