சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் .

by Admin / 05-07-2021 10:36:29am
சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் .

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் 


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதினெண் சித்தர்களால் அருளப்பட்ட சித்த மருத்துவத்தால் முற்றிலும் குணமாக்கக் கூடிய வியாதி நீரழிவு. நித்தியா கல்யாணி என்னும் மூலிகை சர்க்கரை நோயாளியின் புண்ணிற்கு அருமருந்தென்றும், சர்க்கரைக் கொல்லி என்று குறிப்பிடப்பெறும்.

 நெல்லிக்காய்ச் சாறு 100 மில்லி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 2 தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 ஆடையொட்டி இலை, நாவல் மரத்துப்பட்டை, மங்கொட்டைப் பருப்பு ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மதியம், மாலை மூன்று வேளை குடித்து வர நீரழிவு நோய் முற்றிலும் குணமாகும். (ஆனால் நீரிழிவிற்கு ஆங்கில மருத்துவம் செய்து கொண்டவர்களுக்கு இம்முறை பயன் தராது). 

 உலர்ந்த வெள்ளருகுச் சமூலம் 50 கிராம் எடுத்துப் பொன்வறுவலாக வறுத்து 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு 100 மில்லியாக வற்ற வைத்து வேளைக்கு 50 மி.லியாகத் தினம் காலை, மாலை குடிக்க ஆரம்ப நீரிழிவு 10 நாட்களில் குணமாகும்.(தினமும் புதிதாக இந்தக் கஷாயம் தயார் செய்து கொள்ள வேண்டும்).

 சீந்தில் இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரத் தீராத சர்க்கரை நோய் குணமாகும். (இம் மருந்தைக் கோடைக்காலத்தில் தயார் செய்து சாப்பிட்டால் பலன் விரைவில் கிடைக்கும்).

 ஆவாரம் பூ, இலை, காம்பு ஆகிய மூன்றினையும் சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்துக் தூள் செய்து வைத்துக்கொண்டு நாள் தோறும் டீ, காபி,டிக்காஷனுக்குப் பதிலாக இந்தத் தூளை 1 டம்ப்ளர் நீரில் 2 தேக்கரண்டி அளவு பனங்கற்கண்டு, வால்மிளகு, ஏலக்காய் ஆகியவை போட்டுப் பால் கலந்து தினமும் குடித்துவர நீரிழிவு நோய் குணமாகும். (காலை வேளை மட்டும் அருந்தவும்).


நீரழிவு நோய் எனும் சக்கரை நோய்க்கு ஒரு எளிய கை மருந்து


 சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை முயற்சித்துப் பார்க்கலாமே


 மருந்து செய்ய தேவையான பொருட்கள்


 வெந்தயம்  - 50கிராம் 

 கருஞ்சீரகம் - 25கிராம்

 ஓமம் - 25கிராம்

 சீரகம் - 25கிராம்

 

 இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

 செய்முறை

 இவற்றை வாங்கி ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும் (வறுத்தபின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்) 


 உபயோகிக்கும் முறை


 தினமும் காலையில் சிறிய ஸ்பூன் அளவுக்கு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும் ( தேவைப்பட்டால் தண்ணீர் குடிக்கலாம் ) 


 குறிப்பு


 ஒரு வாதத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் 


 இந்த மருந்தை தொடர்ந்து 6 மாதம் சாப்பிட வேண்டும்


 எச்சரிக்கை


 வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் முயற்சி செய்யுங்கள்

 


சக்கரை நோயை முழுவதும் குணமாக


1 வெந்தயம் வரத்து பொடி செய்தது - 100 கிராம்

 2 நாவல் கொட்டை பொடி 100 கிராம்

 3 சிறு குருஞ்சான் பொடி 100 கிராம்

 4 கருந்துளசி பொடி 100 கிராம்


 5 ஆவாரம் பூ பொடி 100 கிராம்


 இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 👆

இவற்றை மருந்தாக வாங்கி வருத்து பொடி செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும் 

 தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து 100 மில்லி  ஆகும் வரை சுண்ட வைத்து வடிகட்டி 

 இரண்டு மண்டலம் ( 48 + 48 = 96 நாட்கள் ) 

 பருகி வர சர்க்கரை நோய் வேரோடு அழியும் 


 

 நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!!

 

Tags :

Share via