நம்பிக்கைக்கு உரியவர்களாக இருங்கள்.

by Admin / 27-11-2024 12:48:02am
 நம்பிக்கைக்கு உரியவர்களாக இருங்கள்.

 உலகம் உருண்டையானது. எந்த நேரத்தில் எது நடக்கும் என்று சொல்வதற்கு இல்லை. நீங்கள், உங்கள் சக மனிதர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு எப்பொழுதும் பாத்திரமாக இருங்கள்..

உங்கள் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து, உங்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், அந்த பொறுப்பை கண்ணியத்துடனும் கடமையுடனும் நீங்கள் செய்தால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பலன்களும் அதிகமாக இருக்கும்..

 ஒரு வேலையை செய்வதற்கு பத்து பேர் வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். அந்த வேலையை செய்வதற்கு ,உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டால் ,அதை முழு மனதோடு அர்ப்பணிப்போடு செய்யுங்கள்.

. நான் இல்லை என்றால் இந்த வேலையை செய்வதற்கு யாரும் இல்லை என்று மட்டும் ஒருபோதும் நினைக்காதீர்கள். உங்களை விட ஆற்றல் மிக்கவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் . உங்களுக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பு போல் அவருக்கு கிடைக்காததால் தான் அவர் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றார். அதனால், உங்கள் மீது நம்பிக்கையை வைத்து ஒருவர் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் விசுவாசமாக இருங்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக... நீங்கள் இருக்க வேண்டுமே தவிர தலைக்கனத்தோடு இருந்தீர்கள் என்றால் அடையாளம் தெரியாமல் ஆகிவிடுவீர்கள்.

ஒரு நிறுவனத்தில், நீங்கள் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தால், உங்களை நோக்கி பலர் வரலாம்: பேசலாம். தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்ந்து உங்களுக்கு ஓய்வில்லாத மாதிரி சூழல் உருவாகலாம்.. அது, அந்த வேலை உங்களுக்கு தந்தது..

நீங்கள் அதை நேர்மறையாக எண்ணாமல் எதிர்மறையாக எண்ணி நான் இருக்கப்போய்தான் இவ்வளவு பேர் என்னோடு தொடர்பு கொள்கிறார்கள். என்னால் தான், இந்த நிறுவனம் வளர்ந்து இருக்கிறது ... வளர்ந்து வருகிறது என்று நீங்கள் நினைத்தீர்களானால், ஒரு நாள் அந்த நிறுவனத்தில் இருந்து உங்களை தூக்கி விட்டால், உங்களுடைய மொத்த ஆட்டமும் காலி என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்களுக்கு வந்த அழைப்புகள் அனைத்தும் நீங்கள் சார்ந்து இருந்த நிறுவனத்திற்காக வந்தது. நீங்கள் போனால், இன்னொருவர்அந்த இடத்திற்கு வந்து விடுவார் .ஆனால் ,உங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகளும் தொடர்புகளும் நின்றுவிடும். அது, அப்படியே மடைமாற்றாக இன்னொருவருக்கு போய் சேர்ந்து விடும்.

அதனால் தனி நபர்கள் என்றென்றைக்கும் நான் இல்லை என்றால் இந்த நிறுவனம் இல்லை என்று ஒருபோதும் அதீதமான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்கள் இருப்பு என்ன என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அப்பொழுதுதான், நீங்கள் தரையில் நிற்கிறீர்களா ....? இல்லை பறக்கிறீர்களா? என்பது உங்களுக்கு தெரியும். பெரும் திறமைசாலிகளை எல்லாம் தலைக்கனத்தால் அழிந்திருக்கிறாா்கள்.

 ஒவ்வொரு நாளும், இந்த உலகம்.. உங்களுக்கு பலவிதமான பாடங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. மறந்து விடாதீர்கள் .

உங்கள் தேவைக்கு தக சில விஷயங்களை கற்றுக் கொள்கிறீர்கள். முக்கால் பங்கு விஷயங்களை ..நீங்கள் விலக்கி விடுகிறீர்கள்.. அதனால், எப்பொழுதும் நம்மை ,நம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து ..ஒருவர் ஒரு பணியை கொடுத்திருக்கிறார் என்றால், அதை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுங்கள்.. வேலை என்பது கண்ணாடி பாத்திரத்தை கையில் வைத்திருப்பது போன்று கவனமுடன் எடுத்துச் சொல்ல வேண்டியது.. அந்த வேலை தான் ,இந்த சமூகத்தில் ..உங்கள் குடும்பத்தில்.. உங்கள் உறவுகளில். ஏன், உங்களை சுற்றி இருக்கிறவர்களிடமிருந்து எல்லா நம்பிக்கையை உங்கள் மீது ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கிறது.  ஒருபோதும் மறக்காதீர்கள்.. தொடர் விழிப்பு தான் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். .சாதாரணமானவர்களையும் நம்பிக்கை தான் உச்சாணிக்கொம்பில் வைத்திருக்கிறது.. கவனமுடன் வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

 

 

Tags :

Share via