தூத்துக்குடி கடற்கரை கிராமங்களி பேரலைகள் உருவாக்க வாய்ப்பு.மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை

by Editor / 10-06-2024 05:06:42pm
தூத்துக்குடி கடற்கரை கிராமங்களி பேரலைகள் உருவாக்க வாய்ப்பு.மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று 10. 6.  24 மதியம் 12:30 மணி முதல் நாளை 11.6 . 24 இரவு 11 மணி வரை கடலில் 2. 4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக் கூடும் எனவும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசு கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 

எனவே கடற்கரையை ஒட்டி உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்கள் கடலின் அருகில் செல்லவோ கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ கடலில் இறங்கி குளிக்கவே கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது மேலும் 10 6 2024 முதல் 14 6 2024 வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசகூடும்  என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

மேலும் கடலோர கிராமங்களை கண்காணித்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பத்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்

 

Tags : தூத்துக்குடி கடற்கரை கிராமங்களி பேரலைகள் உருவாக்க வாய்ப்பு.மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை

Share via