இது ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி.. கனிமொழி

தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு குறித்து திமுக நாடாளுமன்றத் தலைவர் கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags :